ஒபாமாவின் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி..!

456

obama

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துவருவதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் துவக்கத்தில் இருந்த ஒபாமாவின் செல்வாக்கு இப்போது இல்லை என்றும் அமெரிக்கர்கள் மத்தியில் அவர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அமெரிக்கர்களிடையே ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செல்வாக்கு கிடுகிடுவெ உயர்ந்தது.



வெளிநாட்டுக் கொள்கையைக் கையாளுவது, அதிபராகப் பணியாற்றுவது, ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத மிரட்டல் உள்ளிட்டவற்றில் ஒபாமா சிறப்பாக பணியாற்றுவதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின் ஒபாமாவின் செல்வாக்கு 46 சதவீதமாக குறைந்துள்ளது.