உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி : பிரேசிலின் வெற்றியை கொண்டாடிய இளம் பெண் ரத்த வெள்ளத்தில் பலி!!

781

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசிலின் வெற்றியை கொண்டாடிய பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அவரின் நண்பர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 27ம் திகதி செரீபியா-பிரேசில் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியை பிரேசிலின் Tamra Maioch என்ற 30 வயது இளம் பெண் தன் நண்பர்களுடன் Sao Paulo மாகாணத்தின் Itatiba பகுதியில் உள்ள வீட்டில் பார்த்து ரசித்துள்ளார்.

பிரேசில் அணிக்கு இப்போட்டி ஒரு நாக் அவுட் சுற்று போன்று என்பதால், போட்டியின் ஒவ்வொரு நிமிடங்களையும் தவறாமல் Tamra Maioch பார்த்து வந்துள்ளார்.

அப்போது அவர் ஒரு கையில் மொபைல் போன், ஒரு கையில் மது ஊற்றிய நிலையில் கண்ணாடி கிளாஸ்சை வைத்துக் கொண்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து விளையாடிய பிரேசில் அணி வெற்றி பெற்றதால், வெற்றியை தன் நண்பர்களுடன் Tamra Maioch கொண்டாடும் போது, நிலைதடுமாறியுள்ளார்.

இதனால் அவர் வைத்திருந்த கண்ண்டாடி கிளாஸ் கீழே விழ, உடனே இவர் அங்கிருக்கும் காபி டேபிளை பிடித்து நிற்க முயன்றுள்ளார்.

ஆனால் எதிர்பார்தவிதமாக கிழே விழுந்த கண்ணாடி கிளாஸ் மீது விழுந்துள்ளார். கீழே விழுந்த கண்ணாடி கிழாஸ் உடைந்திருந்ததால், அந்த கண்ணாடி துகள் அவரின் கழுத்தை பதம் பார்த்துள்ளது.

இதனால் உடனடியாக அதிகப்படியான இரத்தம் வெளியேறியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் அருகிலிருந்த துணியை எடுத்து இரத்ததை நிறுத்துவதற்கு முயன்றுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து இரத்தம் வெளியேறியதால், அவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.