காதல் திருமணம் செய்ய ஆசை – அனுஷ்கா..!

463

anuகாதல் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்கிறார் அனுஷ்கா.

பி.வி.பி சினிமாஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் திரைப்படம் இரண்டாம் உலகம்.

இதில் ஆர்யா, அனுஷ்கா இரு வேடங்களில் நடிக்கின்றனர்.

22ம் திகதி வெளியாக உள்ள இந்தப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய அனுஷ்கா, இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும். இதில் என் கதாபாத்திரம் சவாலானது, கடினமாக உழைத்திருக்கிறோம்.

ஆர்யாவுடனான எனது கெமிஸ்ட்ரி பற்றி எல்லாம் கேட்கத் தேவையில்லை, ஏனெனில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளோம்.

மேலும் என் திருமணம் பற்றி கேள்விகள் வந்து கொண்டே இருக்கின்றன,ஆனால் இப்போது அதுபற்றி யோசிக்கவில்லை என்றும் நிச்சயமாக காதல் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யாவும், நயன்தாரா தான் எனக்கு சரியான ஜோடி என்று தன் பங்குக்கு வார்த்தைகளை தூவி விட்டுள்ளார்.