வவுனியா வர்த்தகர்களின் நலனுக்காக இருவழிப்பாதை திறந்துவைப்பு!!

585

வவுனியாவில் கடந்த மூன்று வருடங்களாக ஒரு வழிப்பாதையாக மக்களின் பயன்பாட்டில் பயன்படுத்திவரப்பட்ட வவுனியா மில் வீதி இன்று முதல் இரு வழிப்பாதையாக மக்களின் போக்குவரத்து பாவனைக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

மில் வீதியிலுள்ள வர்த்தகர்கள் வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு வழங்கியிருந்த கடிதத்தில், மில் வீதி ஒரு வழிப்பாதையாக இருப்பதால் மக்கள் தமது வியாபார நிலையங்களுக்கு வரவின்றி காணப்படுகின்றது. வாகனங்களில் வரும் மக்கள் இப்பகுதி ஒருவழிப்பாதையக இருப்பதால் இப்பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர். முன்னர் பாவனையிலிருந்ததுபோல இருவழிப்பாதையாக மாற்றித்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தனர்.

இவ்விடம் நேற்று வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீதிப்பாதுகாப்பு கூட்டத்தில் வர்த்தகர் சங்கம் கலந்துகொண்டு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியிலுள்ள வர்த்தகர்களின் நலனினை மையப்படுத்தி இன்று முதல் மில் வீதியை இருவழிப்பாதையாக திறந்து மக்களின் வாகனப் பாவனைக்கு அனுமதிப்பதற்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.