இலங்கையின் நண்பரான மன்மோகன்சிங் பங்கேற்காமை கவலையளிக்கிறது: பசில் ராஜபக்ச..!

442

basilஇந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையின் பொதுநலவாய அமர்வில் பங்கேற்காமை குறித்து தாம் கவலையடையவதாக இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மன்மோகன்சிங் கொழும்பு மாநாட்டில் பங்கேற்றிருந்தால் இந்தியாவின் காத்திரத்தை, மாநாட்டில் நிலைநாட்டியிருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய செய்திதாள் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள பசில் ராஜபக்ச,

மன்மோகன்சிங் இலங்கை வராமை துரதிஸ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.



மன்மோகன்சிங் இலங்கையின் நெருங்கிய நண்பர் எனவே அவர் இலங்கை மாநாட்டில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.