இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசியதாக தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தரமணி பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மே மாதம் 18ஆம் திகதி சென்னை, கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் “தான் பிரபாகரனை நேரில் சந்தித்ததாகவும், தனக்கு துப்பாக்கிச் சுட அவர் பயிற்சியளித்ததாகவும்” சீமான் பல தகவல்களை மேடையில் பேசியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று சீமான் மீது தரமணி பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வண்ணம் பேசுவது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுவது, தவறான வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவது. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.





