நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பரத் திருவிழா!(படங்கள்,வீடியோ)

1212

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.

அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 16 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லூரானின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 23 ஆம் நாளான 07.09.2018 அன்று  சப்பரத் திருவிழா இடம்பெற்றது.

மங்கள வாத்தியங்கள் முழங்க, மந்திர பாராயணங்கள் ஒலிக்க, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர்க் கந்தன் வள்ளி தெய்வயானை சமேதராய் வெளி வீதியுலா வந்தார்.

சப்பரத் திருவிழாவில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.