ஆசியாவின் நரகத்தை நோக்கி நாடு நகர்கின்றது – சரத் பொன்சேகா..!

376

sarathஆசியாவின் நரகத்தை நோக்கி இந்த நாடு நகர்வதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் ஆச்சரியத்தை நோக்கி நகர்வதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்த போதிலும் உண்மையில் நரகத்தை நோக்கியே இந்த நாடு நகர்கின்றது.

ஊழல் மோசடி மிக்க ஆட்சியாளர்களின் இரையாக நாட்டு மக்கள் மாறியுள்ளனர். ஊழல் மோசடிமிக்க ஆட்சியாளர்களுக்கு அஞ்சும் மக்கள் சுயநினைவற்றுள்ளனர்.

வீதிகளை செப்பணிட்டு , பாதைகளை அமைப்பதன் மூலம் நாடு அபிவிருத்தியடைந்துவிடாது. ஜனநாயகம், ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது.



உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பலர் இன்று கூலி வேலை செய்கின்றனர்.

சிங்கப்பூரில் தனி நபர் வருமானம் 48000 டொலர், சீனாவில் 32000, தென் கொரியாவில் 28000 , இலங்கையில் தனி நபர் வருமானம் 2000 டொலர்களாகும்.

நாட்டின் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.