மீண்டும் கன்னித்தன்மையை ஏலம் விடும் மாணவி !!

468

girlபிரேசில் நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித் தன்மையை ஏலம் விடப் போவதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இணையத்தில் விளம்பரம் செய்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

பிரேஸில் நாட்டை சேர்ந்த 21 வயது மாணவி கேத்தரினா மிக்லிஒரினி. இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது கன்னித்தன்மையை விலைபேசி இணையத்தின் மூலம் ஏலம் விட்டார். அப்போது பலநாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த ஏலத்தில் பங்கெடுத்தனர்.

எனினும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நட்சு, அமெரிக்காவை சேர்ந்த ஜேக்மில்லர் ஜேக் ரை மற்றும் இந்தியாவை சேந்ரத் ருத்ரா ஜட்ட்ர்ஜி ஆகியோரிடையே ஏலம் கேட்பதில் கடும் போட்டி நிலவியது.

கடைசியாக 2 இலட்சம் பவுண்டுகள் பேரத்தில் நட்சு வெற்றி பெற்றார். ஆனால் காரணம் தெரிவிக்கப்படாமல் அந்த ஒப்பந்தம் முறிந்து போனதாக அறிவித்தார் கேத்தரினா. இந்நிலையில் தற்போது மீண்டும் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவெடுத்துள்ளாராம் கேத்தரினா.



மேலும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கெடுக்கலாம் என அவர் அறிவித்துள்ளார். ஏலத்திற்கான கடைசித் திகதியாக டிசம்பர் 12ஐ குறிப்பிட்டுள்ளார்.