10 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 100 ஆண்டு சிறை!!

593

abuse1மகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த தந்தைக்கு 100 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பத்து வயதான சொந்த மகளை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபருக்கு எதிராக 12 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

48 வயதான பாணந்துறை கமராலலாகே சந்திரசிறி என்ற நபருக்கே இவ்வாறு கம்பஹா நீதிமன்றம் 100 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 90000 ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்ச ரூபா நட்ட ஈட்டையும் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒன்பது ஆண்டு தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அலகில் தந்தைக்கு மிக முக்கியமான இடம் காணப்படுகின்றது. பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தந்தையின் கடமையாகும். அவ்வாறான கடமையும் பொறுப்பும் உடைய தந்தை மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது சமூகத்தினால் நிராகரிக்கப்பட வேண்டிய செயலாகும் என தண்டனை விதித்த முல் நீதிமன்ற நீதவான் பியசீலி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.