கிழக்கு கடற்பரப்பிற்குச் சென்ற 8 மீனவர்களை காணவில்லை..!

695

seaஅசாதாரண காலநிலை காரணமாக கிழக்கு கடற்பகுதியில் மீனவ படகுகள் இரண்டு விபத்துகக்குள்ளானதில் மீனவர்கள் 8 பேர் காணாமற்போயுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் தெவிந்தர பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கான சென்ற படகுகள் இரண்டு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை எடுத்துள்ளது.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு கடற் பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.