இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள் – கைது செய்ய விசாரணைகளை ஆரம்பம்..!

518

interpolபயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ( இன்டர்போல்) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வெளியில் பல நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் வங்கி உரிமையாளர் எனவும் இவர் விடுதலைப் புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் என கூறப்படுகிறது.

இவர்களை கைது செய்ய ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார், இன்டர்போல் பொலிஸாருக்கு உதவி வருவதாக தெரியவருகிறது.