இலங்கைக்கான சலுகையை நீடித்தது அமெரிக்கா..!

516

americaஎரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பிலான இலங்கைக்கு வழங்கி வந்த சலுகையை அமெரிக்கா நீட்டித்துள்ளது.

ஈரானிடமிருந்து உலக நாடுகள் எரிபொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது.

எனினும் ஒரு சில நாடுகள் மட்டும் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதியளித்திருந்தது. அந்த சலுகைத் திட்டத்தின் அடிப்படையில் இலங்கைக்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தச் சலுகையை மேலும் ஆறு மாத காலத்திற்கு அமெரிக்கா நீடித்துள்ளது.



இலங்கை உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.