பண்டிகை, பாடசாலை விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை!!

589

SLஎதிர்வரும் பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி தொடக்கம் ஜனவரி 2ம் திகதி வரை விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து பதுளைக்கும் மருதானையில் இருந்து காலிக்கும் இரண்டு துரிதகதி ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பதுளை நோக்கிச் செல்லும் ரயில் டிசம்பர் 8ம் திகதி காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும்.

காலி நோக்கிச் செல்லும் ரயில் டிசம்பர் 7ம் திகதி காலை 7.25 மணிக்கு மருதானை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க குறிப்பிட்டார்.