இளைஞன் தற்கொலை
இன்று பிற்பகல் (27.01.2019) கல்லடி பாலத்தில் பாய்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளார். கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த தனுஷ் என்பவரே கல்லடி பாலத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த இளைஞர் தனுஷ் வயது(26) தனியார் நிறுவனத்தின் கல்முனை கிளையில் கடமை புரிபவரே இத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன் இன்னும் ஒருவர் கல்லடி பாலத்தில் பாய்ந்ததாக கூறப்படுகிறது ஆனாலும் அவர் தொடர்பில் தகவல் எதுவும் வெளிவரவில்லை.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இடத்தில் இருவரது மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் தனது நண்பனிடம் தொலைபேசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.












