பொலிஸாருக்கு 15000 முறை அழைப்பை மேற்கொண்ட பெண் கைது!!

549

Calling-ladyஜப்பானில் 15 ஆயிரம் முறை பொலிஸாரை தொலைபேசியில் அழைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானை சேர்ந்த 44 வயது பெண் பொலிஸ் நிலைய தொலைபேசியை தொடர்பு கொண்டு தன்னை யாரோ கொலை செய்யப் போவதாகவும், தன் வீட்டில் திருடர்கள் பயம் இருப்பதாகவும் அடிக்கடி புகார் செய்து வந்தார்.

பொலிசாரும் அவரின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டு வந்தனர். எனினும், பெண் கூறிய படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை. ஆறு மாதங்களில் 15 ஆயிரம் முறை பொலிசாருக்கு அந்தப் பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால் பொலிசார் எரிச்சல் அடைந்தனர்.

பின்னர் பெண்ணின் வீட்டிற்கு சென்ற பொலிசார் தகுந்த காரணங்கள் இல்லாமல் போன் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர். எனினும், அப்பெண் தன் செயலை நிறுத்தாமல் பொலிஸ் துறையின் அவசர உதவி எண்ணுக்கு தொடர்ந்து அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த பொலிசார் அப்பெண்ணை கைது செய்தனர். தகுந்த காரணங்கள் இன்றி போன் செய்ததால் தங்களின் கடமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.