ஜப்பான் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி 6 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கையை வந்தடைந்தார்.
அவர் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை இங்கு தங்கியிருந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகாரத்துறை அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை யசூசி அக்காசி சந்திக்கவுள்ளார்.
இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், புனர்நிர்மாணம், புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்பாக அவர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 23 வது தடவை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.




