இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்..!

532

kamalஇந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் 2வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் தமிழ் திரையுலகின் பீஷ்மர், கமலஹாசனுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடப்பட்டது. கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவிக்கு இப்பட்டியலில் 73-வது இடம் கிடைத்துள்ளது.

100 பேர் கொண்ட இப்பட்டியலில் முதலிடத்தை ஷாருக்கான் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார். 2-வது இடத்தை கிரிக்கெட் வீரர் தோனியும், சல்மான்கான் 3-வது இடத்தையும், சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இப்பட்டியலின் முதல் பத்து இடங்களிலிருந்து கிரிக்கெட் வீரர் ஷேவாக், கரினா கபூர் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ரன்பீர் கபீரும், ஹிருத்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளனர்.



இப்பட்டியலில் இடம் பெற கிரிக்கெட் விளையாட்டிற்கும், சினிமா உலகிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.