வவுனியா நெளுக்குளத்தில் வாள்வெட்டுத் தாக்குதல் : படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்!!

1193

வாள்வெட்டுத் தாக்குதல்

வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (02.04.2019) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வியாபார நடவடிக்கைக்காக தண்டாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது நெளுக்குளம் சந்திக்கு அருகே வைத்து அதிகாலை 3 மணியளவில் முகத்தினை மறைத்துக்கொண்டு பற்றைக்குள் பதுங்கி நின்ற இருவர் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிக்குளம் தட்டாங்குளம் பகுதியினை சேர்ந்த 27வயதுடைய நவசுதர்சன் என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் இரு கால் மற்றும் வலது கையில் பாரிய வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் யாழ்ப்பாணத்தினை தொடர்ந்து வவுனியாவிலும் வாள்வெட்டுக் கலாச்சாரம் தொடங்கியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பாரிய அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.