ஈழ கனவை நிறைவேற்றும் முயற்சியில் அகாஷி செயற்படுகிறார் : குணதாச அமரசேகர குற்றச்சாட்டு!!

768

kunadasaஆயுதத்தினால் பெற முடியாது போன தமிழீழ கனவை நிறைவேற்றும் நோக்கத்துடன், யசூகி அகாஷி போன்றவர்கள் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்..

30 வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகளால் அடைய முடியாது போன தமிழீழம் என்ற கனவை, நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் பலர் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷியின் செயற்பாடுகளும் கருத்துக்களும் கூட அவ்வாறே அமைந்துள்ளன.
எனவே அரசு இவ்வாறான முகமூடிக்காரர்களை நம்பி ஏமாந்து விடக் கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

நண்பர்களைப் போன்று நாட்டுக்குள் நுழைந்து நாசகார சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்பட்டு வருபவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். அத்தோடு அவர்களிடமிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாடு பிளவுபடுவதை தவிர்க்க முடியாது என்றார்.