பிரித்தானியா செல்ல கடும் கட்டுப்பாடுகள்!!

660

ukவெளிநாட்டினருக்கான ஆங்கில தகுதித் தேர்வை பிரித்தானியா அரசு கடுமையாக்கி உள்ளது. பிரித்தானியாவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டவர்கள் முதலில் தங்களுடைய ஆங்கில மொழித் திறமையை நிரூபிக்க வேண்டும்.

ஆங்கில மொழித்திறனை சோதிக்க நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் 200 கேள்விகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. கடந்த வாரம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய விதிமுறை அனைத்து வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.

பிரித்தானியாவில் பிறந்து வெளிநாட்டில் வளர்ந்து மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்ப விரும்பினாலும் இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இதுகுறித்து பிரித்தானியா அமைச்சர் இயான் டங்கன் ஸ்மித் கூறியதாவது..

வெளிநாட்டினர் இங்கு வந்து லாபமடைவதைத் தடுக்க வேண்டும் என்ற பிரித்தானியா மக்களின் விருப்பத்திற்காகவும், பொய்யான காரணங்களை கூறி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதைத் தடுப்பதற்காகவும் சரியான நபர்களை பணியில் நியமிப்பதற்காகவும் இந்தத் தேர்வு கடினமாக்கப்பட்டு உள்ளது என கூறினார்.