சகோதரர்கள் பலி

படகுச் சவாரியில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் நீரியில் மூழ்கிப் உயிரிழந்துள்ளனர் என தெமடகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தெமட்டகொடையை சேர்ந்த 11 மற்றும் 16 வயதுடைய சகோதரர்கள் இருவர் விடுமுறைக்காக பொத்துவில் சென்று கொட்டுகல ஆற்று பகுதியில் படகொன்றில் சவாரி செய்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு வந்த யானையை கண்டு அச்சம் கொண்ட அவர்கள் நீரில் குதித்துள்ளனர். எனினும் நீச்சல் தெரியாததனால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சடலத்தை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

முன்னதாக பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.

திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த பேருந்தும் பதுளை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஏற்பட்டு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டுமொரு துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.




