இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : பலர் வைத்தியசாலையில் அனுமதி!!

73

கொழும்பு – கதிர்காம பிரதான சாலையில், திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று காலை ( 13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நடந்தபோது, ​​பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து அம்பலந்தொட்டையிலிருந்தும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கதிர்காமம் நோக்கியும் சென்று கொண்டிருந்தன. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.