இரவு நேர கார் பந்தயம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

465

carகொழும்பில் நடத்தப்பட்ட இரவு நேர கார் பந்தயம், சட்டவிரோதமானது எனவே இது தொடர்பில் லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மாநகரசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார். இந்த கார் பந்தயத்துக்கான அனுமதிச்சீட்டு விற்பனைக்கு கொழும்பு மாநகரசபை அனுமதியளிக்கவில்லை.

எனினும் அனுமதி சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தர்ம பணி என்ற வகைக்குள் வராமை காரணமாக இதற்கு அனுமதி சீட்டு வரியை அறவிடாமல் இருக்கமுடியாது.

எனவே இது சட்டவிரோத செயல் என்ற அடிப்படையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.