40 குழந்தைகளை தத்தெடுக்கும் உருகுவே ஜனாதிபதி!!

1092

mujhomeதன்னுடைய பதவிக்காலம் முடிந்த பின்பு 40 ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக உருகுவே நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா தெரிவித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகாவின் பதவிக் காலம் வரும் 2014ம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

மிகவும் எளிமையான மனிதனான முஜிகா ஆடம்பரமாக உடை அணிவது, பங்களாவில் வசிப்பது உள்ளிட்டவற்றை விரும்ப மாட்டார். ஜனாதிபதியாக இருந்தாலும் தற்போது தனது பழைய பண்ணை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

சர்வதேச ஊடகங்கள் இவரை உலகின் மிகவும் ஏழ்மையான ஜனாதிபதி என வர்ணித்து வருகின்றன. இந்நிலையில், தனது பதவிக்காலம் முடிந்த பின்பு 40 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் சமீபத்தில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் மசோதாவை நிறைவேற்றி உலக நாடுகளின் அதிருப்தியையும் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.