இருவேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு வைத்திருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் பாதுக்க பொலிஸ் பிரிவின் மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் துப்பாக்கியுடன் இருவர் கைதாகினர்.
சந்தேகநபர்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த துப்பாக்கியை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட முற்பட்டதாக தெரியவந்துள்ளது.
மீகொட பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 45 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, புத்தளம் – கல்லடி பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் கைதான இவர் 24 வயதான கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.





