அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே சதித்திட்டம் : அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!!

898

Vasudevaஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்குள் தற்பொழுது பலமிக்க இரண்டு சதித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு சதித்திட்டம் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி அரசாங்கத்தை மக்களிடம் இருந்து தூர விலக்கி வைத்து கூடிய விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நோக்கத்தை கொண்டது.

இதனை தவிர அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு கெடுதியை செய்யும் எதிர்ப்பாளர்களை முறியடிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவர்களும் சூழ்ச்சியான திட்டத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நபர்களில் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட பல தரங்களில் இருக்கும் அரசியல்வாதிகள், அரச மற்றும் அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளும் இதில் அடங்குகின்றனர்.

இப்படியான நபர்களின் செயற்பாடுகள் தெரியவந்ததை அடுத்து அவர்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் மேலும் சில நபர்களும் இதே போன்ற நிலைமையை எதிர்நோக்க சந்தர்ப்பம் உள்ளது என்றார்.