பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றை வர்த்தக நடவடிக்கைக்காக திறக்க கோரிக்கை!!

539

Palaliபலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன் துறை துறைமுகம் என்பவற்றை வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறந்து விட வேண்டும் இலங்கை அரசாங்கத்திடம் யாழ்.வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு பலாலியில் இருந்து இந்தியாவிற்காக விமான சேவையினையும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண வர்த்தக அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பலாலியில் இருந்து இந்தியாவிற்காக விமான சேவையினை ஆரம்பிப்பதன் மூலம் வர்த்தகர்கள் தமக்கு தேவையான வர்த்தகப் பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள முடியும்.

யுத்தத்தின் பின்னர் தென்னிலங்கை வர்த்தகர்களின் ஊடுருவல் காரணமாக வடபகுதி வர்த்தகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்ற கடனைக் கூட திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே புதிய வர்த்தக வாசலை அவர்களுக்காக திறந்து விட வேண்டும் என்று சங்கம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.