உணவகம் ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் : உயிர் தப்பிய ஊழியர்கள்!!

1218

குருணாகலிலுள்ள உணவகம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டை ஒன்றை வீசியுள்ளார்.

எனினும் குண்டு வெடிக்காமையினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவத்தை அடுத்து உடனடியாக உணவகத்தில் இருந்தவர்கள் வெளியேறிய உணவக ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மாகலந்தாவ பிரதேசத்தில் உள்ள உணவகத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து நேற்றிரவு கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த ஒருவரினால் கைக்குண்டு வீசப்பட்டிருக்கலாம் என உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வெலிபன்ன விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

வெடிக்காத கைக்குண்டு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.