மாங்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!!

1153

arrest1மாங்குளம் கள்ளிருப்பு கோவிலுக்கு அருகில் அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் கைதான இவர் போராகொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் வசமிருந்து மூன்று 500 கிராம் வெடி மருந்து பக்கற்றுகள், 300 கிராம் வெடி மருந்து பக்கற் ஒன்று, அமோனியா நைட்ரேட் 25 கிலோ, மின்சார டெடனேட்டர்கள் 21 உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.