தென் சூடானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் : வெளிவிவகார அமைச்சு!!

1399

SLதென் சூடானில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பிரஜைகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் எந்த தேவையும் எழவில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தென் சூடான் ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் புரட்சிப் படையினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதுடன் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.

தென் சூடானில் சுமார் 75 இலங்கை பிரஜைகள் தொழில் புரிந்து வருகின்றனர். எவ்வாறாயினும் தொழில் வாய்ப்பை பெற்று தென் சூடான் செல்வது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.