பெண் ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் தொந்தரவு கொடுத்து வந்த சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான தனியார் வானொலி ஒன்றில் சேவையாற்றி வரும், மகரகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஊடகவியலாளரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடந்த ஆறு வருடங்களாக இந்த சந்தேக நபர் தொலைபேசி மூலமாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான அஜித் எம். மாசிங்க உத்தரவிட்டார்.
அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த வெலிஹேன கமகே உபுல் கல்யாணவன்ஸ என்பரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மனநலம் குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.




