27 வருடங்களாக மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை சுற்றுலா தலமானது!!

638

mandelaதென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா சமீபத்தில் தனது 95வது வயதில் மரணம் அடைந்தார். கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய அவரை வெள்ளையர் இன அரசு கைது செய்தது.

பின்னர் அவர் 27 ஆண்டுகள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். அதில் 18 ஆண்டுகள் ரூபன் தீவில் உள்ள சிறையில் இருந்தார்.

அவர் மரணம் அடைந்த நிலையில் ரூபன் தீவில் 18 ஆண்டுகள் அவரை அடைத்து வைத்திருந்த சிறை தற்போது சுற்றுலா தலமாக மாறி தென்னாபிரிக்க அரசுக்கு வருமானத்தை குவித்து வருகிறது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர் முதலில் கேப் டவுன் போன்ற இடங்களுக்கு செல்வதில்லை. மாறாக மிகச்சிறிய நகரமான ரூபன் தீவுக்குதான் படையெடுக்கின்றனர்.

அங்குள்ள சிறைக்கு சென்று மண்டேலா அடைக்கப்பட்டிருந்த மிகச்சிறிய அறையை மரியாதை கலந்த ஆர்வத்துடன் பார்க்கின்றனர். அந்த அறையில் மண்டேலா படுக்கையாக பயன்படுத்திய ஒரு போர்வை, மேசை, தண்ணீர் குடித்த டம்ளர், குப்பை கூடை போன்றவை நினைவு சின்னங்களாக உள்ளன.

மண்டேலா விடுதலையாகி 22 ஆண்டுகளாகியும் இன்னும் அவை நினைவு சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.