புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்புமாறு கோத்தபாய அழைப்பு!!

622

kottapayaஇலங்கை தற்பொழுது கடந்த காலங்களில் எதிர்கொண்ட பிரச்சினை சமாளித்து விரைவான மற்றும் சமமான வளர்ச்சியை நோக்கி செல்ல தயாராக உள்ளதால் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த சகல சமூகத்தினரும் நாடு திரும்ப வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

அறிவுசார்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிசார் நிபுணத்துவம் பெற்றவர்கள் இலங்கையில் வசிக்கவும் தொழில்களை மேற்கொள்ளவும் தேவையான உகந்த சூழலை அரசாங்கம் உருவாக்க ஆர்வமாக உள்ளது.

1980ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நாட்டில் காணப்பட்ட நிச்சயமற்ற நிலைமை காணரமாக சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை அடைய வேண்டும் என்பதற்காக பல திறமைசாலிகள் நாட்டை பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

 

மோதல்கள் காரணமாகவும் உயர்கல்விக்காகவும் சிறந்த இலாபகரமான தொழிலை பெறவும் சிறந்த தரமான வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவும் இவர்கள் நாட்டை விட்டு சென்றமை நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்.

நாட்டில் இருந்து வெளியேறிய சகல சமூகத்தினரும் தமது தாய் நாட்டுக்கு திரும்பக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தாய்நாட்டுக்கு திரும்பவது குறித்து இவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.