டுபாயில் 14 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இலங்கை உயிர் பாதுகாப்பு (நீச்சல்) அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டுபாயின் ஜுமேரியா கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த மே மாதம் 28ம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 23 வயதான இலங்கை உயிர் பாதுகாப்பு (நீச்சல்) அதிகாரி இந்திய சிறுவனை (14வயது) வல்லுறவு செய்ததாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழ் மொழிப்பெயர்ப்பு வசதி இல்லாத காரணத்தால் வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கை உயிர் பாதுகாப்பு (நீச்சல்) அதிகாரி தனது மகனை பாடம் கற்பிப்பதாகக் கூறி அறையொன்றுக்கு அழைத்துச் சென்று வல்லுறவு புரிந்ததாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
தனது மகனை அறைக்குள் அழைத்துச் சென்றவர் உள்ளாடைகளை கழட்டுமாறு கோரியபோது தனது மகன் அதனை மறுக்கவே பலாத்காரமாக வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும் தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி என செயன்முறை பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறுவனை அறைக்குள் அழைத்துச் சென்று பாடம் நடத்தியதாகவும் அந்த வேளை அறைக்குள் வந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அது அநாகரீகமாக தெரிந்ததாகவும் இலங்கை உயிர்பாதுகாப்பு (நீச்சல்) அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும் தந்தையின் முறைப்பாட்டை அடுத்து இலங்கை உயிர்பாதுகாப்பு (நீச்சல்) அதிகாரி கைது செய்யப்பட்டதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.




