கால்பந்து போட்டி பார்க்க விடாமல் அழுத குழந்தையை அடித்து கொன்ற வாலிபர்!!

707

babyஅமெரிக்காவில் ஒக்லஹோமாவை சேர்ந்தவர் டிரிவியான்ஸ் மார்கஸ் வால்கர் (22). அவர் தீவிர கால்பந்து இரசிகர். சம்பவத்தன்று இவர் தனது காதலி வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான கால்பந்து போட்டியை இரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது காதலியின் 5 மாத ஆண் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்தவில்லை. அது வால்கருக்கு தொந்தரவாக இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த வால்கர் காதலியின் கையில் இருந்த குழந்தையை திடீரென பறித்தார். 2 அடி உயரத்துக்கு தூக்கி பின்னர் தரையில் வீசினார்.

இதனால் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டது. காதில் இருந்து இரத்தம் வழிந்தது. மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சொன்றார். ஆனால் அக்குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து வால்கரை கைது செய்தனர். விசாரணையில் கால்பந்து போட்டியை பார்க்க விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் குழந்தையை அடித்து கொன்றதாக அவர் கூறினார்.