நத்தாரின் மணியோசை நல்லெண்ண செய்தியை கொண்டு வருகின்றது : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!!

1180

mahinda_rajapaksaஇலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் கடந்தகால மரபுகளுக்கேற்ப இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான சுதந்திரமான சூழலைப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் நத்தார் பண்டிகை, சமூகத்தில் எல்லா வேறுபாடுகளையும் கடந்து அன்பு என்ற செய்தியை ஏந்தி சமாதானத்தின் இளவரசாக இப்பூவுலகிற்கு வந்த யேசுவின் பிறப்பினைக் குறிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசுவின் பிறப்பானது எளிமையான வாழ்க்கை, எல்லோருக்கும் அன்பு, இயற்கை உட்பட இந்த உலகை பகிர்ந்து கொள்ளும் எல்லலோர் மீதும் அக்கறை செலுத்த வேண்டும் என்ற முக்கிய செய்தியைக் கொண்டுவருவதாக வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நன்நாளில் நத்தார் மணி எழுப்பும் நாத ஓசை சமாதானம், மகிழ்ச்சி நல்லெண்ணம் என்ற செய்தியை எல்லோருக்கும் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.