விபத்தில் படுகாயமடைந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

531

விபத்தில் படுகாயமடைந்த 7 வயது சிறுவன்

திருகோணமலை – குச்சவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதியமையினால் நேற்று இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் குச்சவெளி-காசீம் நகர் பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய றினோஸ் நிஸ்ரி ஷெரீப் என தெரியவந்துள்ளது.

உழவு இயந்திரத்தின் பெரிய டயருடன் மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து சைக்கிளில் சென்றவர்கள் கீழே வீழ்ந்ததுடன் சிறுவன் டயருக்குள் சிக்குண்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.