
அண்டார்டிகா கடலில் ஐஸ்கட்டிகளுக்கு நடுவே சொகுசு கப்பல் ஒன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் கட்டப்பட்ட அவுஸ்திரேலிய பயணிகள் சொகுசு கப்பல் ஒன்று 50 சுற்றுலா பயணிகளுடன் தனது பயணத்தை மேற்கொண்டது.
இந்த கப்பல் அண்டார்டிகா பகுதியில் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த போது ஐஸ் கட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது. இரண்டு நாட்களாக மாட்டிக் கொண்டுள்ளதால், அதில் இருக்கும் பயணிகள் பலவித சிரமங்களுக்கு இடையே தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மிக துரிதமாக மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.




