கொழும்பில் தெற்காசியாவின் அதிசயம் : இலங்கைக்கு ஏற்பட்ட பேரிடி!!

383

தெற்காசியாவின் அதிசயம்

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தினால் இலங்கை அரசாங்கம் 5,475 மில்லியன் ரூபாய் வருமானத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாமரை கோபுரம் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை உரிய முறையில் பெற்றுக் கொள்ளாமை, நிர்மாணிப்பு தொடர்பில் பொறுப்பு கூறும் நிறுவனம் உரிய காலங்களுக்குள் தீர்மானம் எடுக்காமை மற்றும்

ஒப்பந்தக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாமதம் காரணமாக, 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரையில் 5,475 மில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தாமரை கோபுர ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்டமை மற்றும் மேலதிக கடன் பணமாக 141 487103 ரூபாய் சீனாவின் எக்சீம் வங்கியிடம் பெற்றுள்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுர நிர்மாணிப்பு திட்டம் 912 நாட்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நிர்மாணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமாக கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.