சிரியாவில் கொத்துக் குண்டுத் தாக்குதலில் 517 பேர் பரிதாபமாக பலி!!

649

bombசிரியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான அலெப்போ நகரில் மேற்கொள்ளப்பட்ட கொத்து குண்டு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கடந்த இரண்டு வார காலப்பகுதியில் மாத்திரம் 517 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 146 சிறுவர்களும் 47 பெண்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த காலப்பகுதியில் சிரிய இராணுவத்தினரால் அலெப்போ நகரை குறிவைத்து வானூர்தியில் மூலம் கொத்து குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.