தனி ஆளாக திருடனுடன் போராடிய 11 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

298

சிறுவனுக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் தாயின் நகையை திருடிய திருடினை துணிச்சலுடன் பிடிக்க உதவிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் மனைவி திவ்யா. மகன் தனிஷ் மகதிக் ( 11). நேற்று முன்தினம் பிரபாகர் அலுவலகத்துக்குச் சென்றுவிட்ட நிலையில் திவ்யா வெளியே சென்றிருந்தார்.

தனிஷ் மதிய உணவுக்காக, வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், தான் மின் ஊழியர் என்றும் வீட்டில் ஒயரை சோதனை செய்ய வேண்டும் என்றும் சொன்னார். இதையடுத்து தனிஷ், தனது அம்மா வீட்டில் இல்லை, பிறகு வாருங்கள் என கூற அதைக் கேட்காத அவர், அவனை படுக்கறையில் தள்ளி கொன்றுவிடுவதாக மிரட்டினார். பின்னர் பீரோவில் இருந்த ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடிவிட்டு தப்பியோடினார்.

திருடனை பிடிக்க முயன்ற தனிஷால் அது முடியாமல் போக திருடன், அவனைப் பிடிங்க என்று கத்தினான். அதற்குள் திவ்யா குடியிருப்பின் மாடியில் ஏறிக்கொண்டிருந்தார். மகனின் சத்தம் கேட்டு, அந்த திருடனை பிடித்து, இழுத்தாள். ஆனால் திவ்யாவை படியில் தள்ளிவிட்டு ஓடினான் திருடன். இதில் திவ்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சிறுவன் தொடர்ந்து கத்தியதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவனை அமுக்கினர். கையை கட்டி, சரமாரியாக தாக்கினர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவன் பெயர் அப்துல் கான் (52) என்பதும் அவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

திருடனை பிடிக்கத் துணிச்சலுடன் செயல்பட்ட தனிஷ் கூறும்போது,என்னை திருடன் படுக்கையில் தள்ளினான், ஆனால் என்னை அவன் அடிக்கவில்லை. அந்த நெக்லஸ் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. அதை திருடன் திருடிச் சென்றுவிடாமல் தடுக்க நினைத்து போராடினேன் என கூறினார். தனிஷின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.