மனைவியை சந்தேகித்த கணவனுக்கு 20 சவுக்கடி வழங்கிய சவுதி நீதிமன்றம்!!

922

Savukkadiசவுதி அரேபியாவில் உள்ள ஒருவருக்கு சென்ற மாதம்தான் திருமணம் ஆகியது. ஆனால் சந்தேகப்புத்தி கொண்ட கணவர் முதலிரவுக்கு முன்பு தனது மனைவியின் கன்னித்தன்மை குறித்து சந்தேகம் அடைந்தார்.

மனைவியின் தந்தை, மற்றும் உறவினர்களிடம் சென்று இதுகுறித்து சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தனது கன்னித்தன்மை குறித்து பரிசோதனையின் முடிவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனைவி, தனது கணவன் தன்மீது வீண்பழி போடுவதாக குற்றம் சாட்டினார்.

மனைவியின் ஆதாரத்தை பார்த்த நீதிபதி எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனைவியை சந்தேகம் கொண்ட கணவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் 20 சவுக்கடி கொடுக்கும்படி தீர்ப்பளித்தார்.

மேலும் அவருடைய மனைவி விரும்பினால் வேறு திருமணம் செய்துகொள்ளவும் அனுமதியளித்தார். சவுதி அரேபிய சட்டப்படி ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால் திருமணத்திற்கு தகுதியானவர் என்று கூறப்படுகிறது.