வவுனியாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது!!

687

இரு சந்தேகநபர்கள் கைது

வவுனியாவில் கொ ள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா – செக்கட்டிபுலவு, பூவரசங்குளம் பகுதியில் நேற்று இரவு குறித்த இருவரை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது,

சந்தேகநபர்களிடம் இருந்து கொ ள்ளையிடப்பட்டதாக கருதப்படும் பொருட்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறு கொ ள்ளைச் சம்பவம் ஏதேனும் இடம்பெற்றிருந்தால் உடனடியாக முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.