பாகிஸ்தானில் மூன்று வயது சிறுவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது முல்தான்.
இந்த மாவட்டத்தை சேர்ந்த முகமது பருக் என்பவர் பரூக் பீபி மற்றும் அவரது மகன் சையத் தன்னை தாக்கி செல்போன் மற்றும் 22000 ரூபாயை பறித்து விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பரூக் பீபி மற்றும் சையத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று ஜாமின் கேட்டு பரூக் பீபி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் இந்த வழக்கு பொய்யானது என்றும் சையத்துக்கு வெறும் மூன்று வயதே ஆவதால் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பான விசாரணையின் போது பீபியின் வக்கில் ஒரு பெண் தனது மூன்று வயது மகனை வைத்துக் கொண்டு எவ்வாறு ஒரு ஆணை தாக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பொலிசார் பணத்தை வாங்கி கொண்டு இவ்வாறு செயல்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து பீபிக்கு ஜாமின் வழங்கியதுடன், குழந்தையின் பெயரை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
வருகிற 16ம் திகதி குற்றம் சாட்டிய நபரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.




