வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு!!

542

சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (24.09.2019) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இச் செயலமர்வு இடம்பெற்றது.

சர்வதேச சிறுவர் தினமானது இம்முறை பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு என்னும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. அதன் ஒரு கட்டமாக மாணவர்களின் திறன்களை விருத்தி செய்யும் முகமாக இச் செயலமர்வு இடம்பெற்றது.

இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கிறேட் மிசன் அமைப்பைச் சேர்ந்த சமூக பணியாளர்கள் வளவாளராக கலந்து கொண்டு தமது நாட்டின் திறன் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவிப் பிரதேச செயலாளர் கமலதாசன், சிங்கப்பூர் கிறேட் மிசன் சமூக பணியாளர்கள், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன்,

மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி, செட்டிகுளம் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் இளஞ்சிங்கம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், செட்டிகுளம் மகாவித்தியாலயம் மற்றும் அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.