வவுனியாவில் பௌத்த பிக்குகளின் அடாவடியினை கண்டித்து போராட்டம்!!

617

வவுனியாவில்..

நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய புனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்தி சைவத் தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பெளத்த துறவியின் உடல் தகனம் செய்யப்பட்டமை மற்றும் நீதி கேட்ட சட்டத்தரணி, பொதுமக்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து வவுனியாவில் இன்று (24.09.2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 948 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினாலேயே இன்று இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

948 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபடும் போராட்ட தளத்திற்கு முன்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு தமிழர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகிறார்கள் இன ரீதியாகவும் , மத ரீதியாகவும் அவர்களின் வாழ்விடம் வலுக்கட்டாயமாகவும் எடுக்கப்படுகின்றது,

நேற்று இராணுவமும் காவல்துறையும் ஒரு போதும் நீதி அமைப்பிலிருந்து சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவோ பராமரிக்கவோ இல்லை, இந்த இலங்கை அமைப்பில் யார் வாழ விரும்புவார்கள்? இந்துக் கோவில் என்று அழைக்கப்படும் புனித இடத்தில் இனவாதி பிக்குவை தகனம் செய்தது ஏன்? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.