தாதிய உத்தியோகத்தர்களின்..

வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று ஒரு மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போ ராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட இப்போ ராட்டம் தொடர்பில் அரச தாதிய உத்தியோகத்தர்களின் சங்கத்தினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புரட்டாசி மாதம் தாதியர்களின் சம்பளமானது கடமை தவிர்ந்த மேலதிக கடமைக்குரிய கொடுப்பனவு எதுவித எழுத்து மூலமான அறிவித்தலும் இன்றி கணக்காளர், கொடுப்பனவுப் பிரிவு உத்தியோகத்தர்களும் இணைந்து தாதியர்களின் கொடுப்பனவுகள் கழிக்கப்பட்டுள்ளது.

பழைய ஒரு சுற்று நிரூபத்தினடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து சரியான விளக்கங்களும் எவையும் பெற்றுக்கொள்ளாமல் வவுனியா பொது வைத்தியசாலையில் மட்டும் இச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து சரியான விளக்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு கழிக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு கோரியும்,

தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும் இன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரையும் அடையாள வேலை பணிப்புறக்கணிப்பும் இதற்குச் சரியான தீர்வு எட்டப்படாவிட்டால் தொடர்ச்சியாக வடமாகாணம் தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தாய்ச்சங்கங்களின் அறிவுறுத்தல்களுக்கேற்ப நாம் இணங்கியுள்ளோம்.

இந்நடவடிக்கை மேற்கொண்டவர்களுக்கு எ திராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோருகின்றோம். எமது தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்களுக்கு ஏற்படும் பராமரிப்பு பாதிப்புகளுக்கு இதில் எமது சங்கம் எதுவிதமான பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாது.

முற்று முழுதாக நிர்வாகத்தையே சார்ந்ததாக இருக்கும் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம், கொழும்பு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகிவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




