மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன் 3 வயது மகனுடன் தற்கொலை!!

866

Fireபிரான்ஸ் நாட்டில் தனது மனைவியை தீ வைத்து கொளுத்தி விட்டு 3 வயது மகனுடன் 9வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பிரான்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது பர்கண்டி நகர்.

இதன் அருகே டிஜான் என்ற ஊரில் செனோவே என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொலிஸ் அதிகாரி மார்ரி கிறிஸ்டினே கூறியதாவது..

மாடியில் இருந்து குதித்து யாரோ தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்றோம். அங்கே 25 வயது வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

அவரது உடலுக்கு அருகே படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 வயது குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலன் இன்றி குழந்தையும் இறந்தது. விசாரணையில், அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.

இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மனைவி வீட்டுக்கு நேற்று சென்று வாலிபர் தகராறு செய்துள்ளார். பின்னர் மனைவியை தீ வைத்து கொளுத்தினார். தனது 3 வயது மகனை எடுத்து கொண்டு, மனைவி வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் 9வது தளத்துக்கு சென்று அங்கிருந்து குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவல் அறிந்து அந்த வீட்டுக்கு சென்று தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளோம் என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.