வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் இரத்ததான முகாம்!!

487

இ ரத்ததான முகாம்

இ ரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா மன்னார் வீதி நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இ ரத்ததான முகாம் இன்று (17.10.2019) சிறப்பாக இடம்பெற்றது.

‘உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள் : இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பா ல்வினை நோய் மற்றும் எ ய்ட்ஸ் கி ருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்ததானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கும் மேம்படுவதற்கும் உதவும். இரத்ததானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. ம யக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.

ம யக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.